×

தங்க தாயத்தை பறித்தவர் கைது

திருச்சி, ஆக.14: குழந்தையிடம் தங்க தாயத்தை பறித்து சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் கோகுலம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம்(38). இவரது ஒன்றரை மகன் ஆக.12ம் தேதி வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சைக்கிளில் பிளாஸ்டிக் பொம்மைகளை விற்பனை செய்யும் முதியவர் குழந்தை அருகே வந்து, கழுத்தில் அணிந்திருந்த 1 கிராம் தங்க தாயத்தை பறித்து சென்றார்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து கீழசிந்தாமணி ஓடத்தெரு பகுதியை சேர்ந்த முத்து (60) என்ற முதியவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிராம் தங்க தாயத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Trichy ,Manickasundaram ,Gokulam Street, Ambedkar Nagar, Srirangam, Trichy ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...