×

திருச்சியில் லேப்டாப் திருடன் கைது

திருச்சி, ஆக.13: திருச்சியில் லேப்டாப்களை குறிவைத்து திருடும் பலே திருடனை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(49). இவர் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 19ம் தேதி மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு பஸ்சில் சென்றார்.

பஸ் பஞ்சப்பூர் பஸ் நிலையம் வந்தவுடன், இயற்கை உபாதைக்காக இறங்கி சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது அவரது லேப்டாப் திருடு போனது. இதேபோல தென்காசியை சேர்ந்தவர் பார்த்திபன்(34). இவர் சைபர் குற்ற பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் படித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 31ம் தேதி தஞ்சாவூரில் இருந்து தென்காசிக்கு பஸ்சில் பயணித்தார்.

பஸ் திருச்சி-பஞ்சப்பூர் பஸ் முனையம் வந்த பின்னர் மீண்டும் புறப்பட்டது. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின் தனது லேப்டாப் மாயமாகி இருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, எ.புதுார் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, லேப்டாப் திருடிய தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தான் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : Trichy ,Sreedharan ,Madurai ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...