திருச்சி, ஆக.13: திருச்சியில் கள்ளக்காதலியை தாக்கிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கொட்டப்பட்டை சேர்ந்தவர் அமுதா (28), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்த இவருக்கும், அங்கு வேலை பார்க்கும் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மணிகண்டன், அமுதாவை அடிக்கடி தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமுதாவின் வீட்டுக்கு சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, சண்டையிட்டு தாக்கியதால் காயமடைந்த அமுதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை தேடுகின்றனர்.
