- தேசிய குடற்புழு நீக்க முகாம்
- திருச்சி
- மாவட்ட கலெக்டர்
- சரவணன்
- முகாம்
- பொய்யாமிளகுபாறை அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளி
திருச்சி, ஆக. 13: திருச்சி கலெக்டர் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
திருச்சி. பொியமிளகுபாறை அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் மாவட்ட கலெக்டர் சரவணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை வழங்கினார்.
தொடா்ந்து, குடற்புழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம் என்பதை மாணவ, மாணவிகளிடையே வலியுறுத்தும் வகையில் அவர் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் ஹேமசந்த் காந்தி, மாநகர் நல அலுவலர் விஜய்சந்திரன், கவுன்சிலர்கள் புஷ்பராஜ், மருத்துவ பணியாளா்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
