×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், ஆக.12:சேலம் கிழக்கு மின்கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (13ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையில் உடையாப்பட்டி காமராஜர்நகர் காலனியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுகரசு கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Salem ,Salem East ,Electricity ,Division ,Salem East Division ,Salem Electricity Distribution Circle ,
× RELATED பாஜவில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் ஐக்கியம்