மணப்பாறை, ஆக, 8: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் தமிழ் சங்கம் மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்வில் ஆசிரியர் பழனி, பேரூராட்சி துணை சேர்மன் ரதி ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர், அஜீஸ், கணபதி, ஆறுமுகம், ஹக்கீம், திமுக மாவட்ட பிரதிநிதி அப்துல் சலாம், முன்னாள் கவுன்சிலர் நல்லம்மாள் அழகன், வக்கீல் ரிஸ்வான், ஆராமுதன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கீதா ராஜா காவேரி மணியன் செய்திருந்தார்.
