×

கறிக்கு பணம் கேட்ட இறைச்சி கடைக்காரருக்கு அடி உதை

திருச்சி, ஆக. 8: திருச்சி சுப்ரமணியபுரம், ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் அப்துல் நசீர்(32). அன்பில் நகர் ஜங்சன் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் ரசாக், முகமது தள்ளு வண்டியில் பீப் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரசாக், முகமது ஆகியோர் ரூ.55 ஆயிரத்திற்கு அப்துல் நசீரிடம் மாட்டிறைச்சியை வாங்கிவிட்டு அதற்கான தொகையை தராமல் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 6ம் தேதி நசீர் மாட்டிறைச்சிக்கான தொகையை அவர்களது கடைக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பேரும், நசீரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Trichy ,Abdul Nazeer ,Jaylaniya Street, Subramaniapuram, Trichy ,Anbil Nagar Junction ,Razak ,Mohammed ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...