கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம்

தொண்டி, ஆக.8: தொண்டி அருகே தளிர் மருங்கூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தொண்டி அருகே உள்ள தளிர் மருங்கூர் சிங்கமுக காளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக போட்டி நடைபெற்றது. பெரிய மாடு பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்து கொண்டது. 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தயத்தில் 13 வண்டிகளும் கலந்து கொண்டன. 6 மைல் தூரம் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடு வண்டிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: