×

சூளையில் பணிபுரிந்த 15 பேர் மீட்பு

மேட்டூர், டிச.4:மேச்சேரி அருகே கூணாண்டியூரில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில், திருவண்ணமாலை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். அவர்களை கொத்தடிமை போல் நடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சேலம் கோட்டாட்சியர் வேடியப்பன் மற்றும் போலீசார், நேற்று செங்கல் சூளைக்கு சென்று விசாரித்தனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் கோசலை கிராமத்தைச்சேர்ந்த மலையப்பன்(45), அவரது  மனைவி சுமதி(37), மகன் சுஜித்(17), அதே பகுதியைச் சேர்ந்த  நாகராஜ்(30), அவரது மனைவி வெண்ணிலா(25) மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும்,  குணசேகரன்(35), அவரது மனைவி வள்ளி(30), அவர்களது 5  குழந்தைகள் மற்றும் கோபி (20) ஆகியோர் கொத்தடிமைகளாக இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்கள் மீட்கப்பட்டு மேட்டூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 15 பேருக்கும் உணவு -உடைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Tags :
× RELATED கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு