×

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சேலம், டிச.4:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், சேலம் வந்திருந்தார். நேற்று காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பயணியர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் ராமன் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர், சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் ராமன், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்பி தீபாகனிகர், டீன் பாலாஜிநாதன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் அனைத்துத்துறை தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணி குறித்தும், தற்போதைய பாதிப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி எடுத்துரைத்தார். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிமராமத்து திட்ட பணிகள் மற்றும் பிற துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து முதல்வருடன் பேசினர். இதில், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதியிலும் அதிமுக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
இக்கூட்டத்தில், அதிமுக தேர்தல் பணி குழு பொறுப்பாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர் செம்மலை எம்எல்ஏ, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, எம்எம்ஏக்கள் சக்திவேல், வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி, முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் சரவணன், ஜெகதீஸ்வரன், யாதவமூர்த்தி, தியாகராஜன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,executives ,AIADMK ,Suburban District ,
× RELATED அதிமுகவில் தானும் அடுத்த முதலமைச்சர்...