×

வீடு புகுந்து சிறுமி பலாத்காரம் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது

ஓமலூர்,  டிச.4:  ஓமலூர் அருகே பாகல்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த 11வயது சிறுமி,  அருகிலுள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து  வருகிறாள். கடந்த  செப்டம்பர் மாதம் 24ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமி துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது,  அப்பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளனர். இதுகுறித்து தனது பெற்றோரிடம்  சிறுமி தெரிவித்தார். அவர்கள், வாலிபர்கள் 3 பேரையும் கண்டித்துள்ளனர். இதையடுத்து,  பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில், சிறுமி வீட்டிற்குள் புகுந்த  வாலிபர்கள், எங்கள் மீதே புகார் கொடுக்கிறாயா என மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால், மாணவி கதறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்  அங்கு சென்றனர். அவர்களை கண்டதும் 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார்  விசாரித்து, ஜெயராமன் மகன் கணேசன்(20)  மற்றும் 17வயது சிறுவன், முத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்  மகன் பூபாலன்(20) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.  இந்நிலையில், கணேசன் மற்றும்  பூபாலன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 17  வயது சிறுவனை தேடி வருகின்றனர்.


Tags : teenagers ,house ,
× RELATED சாலை விபத்தில் வாலிபர்கள் பலி