×

வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நாமக்கல்லில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.4: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நாளை (5ம்தேதி) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல்- மோகனூர் சாலை அண்ணா சிலை அருகில், நாளை காலை 9 மணிக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலும், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், கட்சி தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : protest ,DMK ,Namakkal ,
× RELATED எச்சரிக்கை வேளாண் சட்டதிருத்தங்களை...