×

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் அந்தியூர் செல்வராஜ் 3 நாள் கலந்துரையாடல்

நாமக்கல், டிச. 4: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் கிழக்கு மாவட்டத்தில் இன்று (4ம்தேதி) 3 நாள் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். அவரது நிகழ்ச்சிகள் விபரம்: இன்று (4ம்தேதி) காலை 11 மணிக்கு ராசிபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, ஆர்எம்சி காலனியில் திமுக கொடியேற்றி, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடுகிறார். மாலையில் ராசிபுரம் நகரில் திமுக மூத்த உறுப்பினர்களை சந்திக்கிறார். தொடர்ந்து, வெண்ணந்தூர் பேரூர் மற்றும் அரமதம்பாளையத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். மாலையில் அத்தனூரிலும், இரவில் பட்டணம் குச்சுகாட்டிலும் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.நாளை (5ம்தேதி) காலை 11 மணிக்கு ராசிபுரம் ஒன்றியம், மலையாம்பட்டியில் விவசாய வேலை செய்யும் பெண்களிடம் கலந்துரையாடல், தொடர்ந்து புதுப்பட்டி பேரூரில் கொடியேற்றும் நிகழ்ச்சி, பின்னர் புதுப்பட்டி பேரூர், ஆர்.பி.காட்டுர், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ராஜ பாளையம், முள்ளுக்குறிச்சியில் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

இரவில் பிள்ளாநல்லூர் பேரூர், நெசவாளர்கள் சந்திப்பு, தொடர்ந்து அருந்ததியர் சமுதாய மாணவிகளுக்கு கைப்பேசி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.6ம்தேதி புதுச்சத்திரம் ஒன்றியம், ராமநாயக்கன்பட்டியில் நாயக்கர் சமுதாய மக்கள், அகல்லாங் காட்டில் அருந்ததியர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மதியம் நாமக்கல் ஒன்றியம், சிலுவம்பட்டியில் அருந்ததியர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் சிலுவம்பட்டியில் கோழிபண்ணை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.  மாலையில் மோகனூர் ஒன்றியம், ஆரியூர், நடுபட்டி, பரளியில் அருந்ததியர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Stalin ,discussion ,Anthiyur Selvaraj ,
× RELATED திமுக. எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது...