×

சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல், டிச.4: மோகனூர் அருகே 17வயது சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் செய்த வாலிருக்கு, ஆயுள்தண்டனை விதித்து நேற்று மகளிர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஆரியூர் ஆமைப்பாறையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருள்பாண்டியன் (21). இவர்  அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்த 2013 செப்டம்பர் 6ம் தேதி  நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கட்டாய  திருமணம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மோகனூர் போலீசில்  புகார் அளித்தனர்.  அதன்பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்குபதிவு செய்து,  அருள்பாண்டியன் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட  மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுசிலா  ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட  அருள்பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹3 ஆயிரம் அபராதம் விதித்து  நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் அருள்பாண்டியனின் பெற்றோர் உள்பட 8 பேர் மீதான குற்றம், அரசு தரப்பில் நிருபிக்கபடாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Adolescent ,
× RELATED கன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள்...