×

ஆசிரியர் புகார் எதிரொலி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

நாமக்கல், டிச.4: , மல்லசமுத்திரம் அடுத்த கோட்டபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்ரமணியனுக்கும், ஆசிரியர் தனபால்(28) என்பவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. தலைமை ஆசிரியர் டார்ச்சர் செய்தவாக, ஆசிரியர் தனபால் கடந்த சில மாதத்துக்கு முன் சிஇஓ  அய்யணனிடம் புகார் அளித்தார். தொடர்ந்து நிர்வாக மாறுதல் மூலம், கொல்லிமலை அரசு மாதிரி பள்ளிக்கு, ஆசிரியர் தனபால் மாற்றப்பட்டார்.
பணியில் சேர்ந்து 2 மாதமாகியும், அவரது பணிப்பதிவேடு, (எஸ்ஆர்) சம்பள பட்டியல் ஆகியவற்றை, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் அனுப்பாததால், கடந்த இரு மாதமாக சம்பளம் பெற முடியவில்லை. இதுகுறித்து ஆசிரியர் தனபால், சிஇஓவிடம் புகார் அளித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியரை அழைத்து, சிஇஓ விசாரணை நடத்தினார். தொடர்ந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர் தனபாலின் பணிப்பதிவேடு, சம்பள பட்டியல் ஆகியவற்றை, நேற்று முன்தினம் மாலை சிஇஓ அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து, சிஇஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Echo ,teacher complaint Action ,head teacher ,
× RELATED வரத்து குறைவு எதிரொலி புதன் சந்தையில்