×

கிருஷ்ணகிரியில் நாளை திமுக கண்டன ஆர்ப்பாட்டம் செங்குட்டுவன் எம்எல்ஏ அறிக்கை

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகள் விரோத வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், அண்ணா சிலைக்கு எதிரில் மாவட்ட திமுக சார்பில் கருப்பு கொடியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில விவசாய அணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். எனவே, கட்சியின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கிளை வார்டு நிர்வாகிகள், விவசாய சங்கங்கள், கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : DMK ,protest rally ,Krishnagiri ,Senkuttuvan MLA ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...