×

டிவிட்டர் லோகோவில் பறவைக்கு பதில் நாய்: எலான் மஸ்க் குறும்பு

வாஷிங்டன்: டிவிட்டர் லோகோவில் நீல நிற பறவைக்கு பதில் நாய் உருவத்தை எலன் மஸ்க் மாற்றி அமைத்து உள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். தற்போது டிவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். நீல நிற பறவைக்கு பதில் மஞ்சள் நிற நாய் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் படம் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது.

டாஜிகாயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது என்று டிவிட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் மூலம் விளக்கம் அளித்துள்ளார். டிவிட்டர் இணைய தளத்தில் மட்டும்தான் இந்த லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் டிவிட்டர் செயலியில் இன்னமும் நீல நிற பறவை லோகோதான் உள்ளது.

The post டிவிட்டர் லோகோவில் பறவைக்கு பதில் நாய்: எலான் மஸ்க் குறும்பு appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Washington ,Twitter ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து