×

விவசாயிகளுக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.4: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகளை வஞ்சிக்கும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் உத்தரவின்பேரில், இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில், நாளை (5ம் தேதி) காலை 9 மணி அளவில், கலெக்டர் அலுவலகம் முன் கருப்பு கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் விவசாய பெருமக்கள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணியிடம் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

Tags : Demonstration ,Eastern District DMK ,
× RELATED டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்