×

பாலக்கோடு வெள்ளிச்சந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

பாலக்கோடு, டிச.4: பாலக்கோட்டில் திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமையில் வெள்ளிசந்தையில் நடந்தது. தர்மபுரி எம்பி செந்தில்குமார் கலந்துகொண்டு, வாக்குச்சாவடி முகவரிகளின் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் செய்திருந்தார். இதில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, வழக்கறிஞர் மணி, மாதையன், ராஜகுமாரி மணிவண்ணன், மாதேஸ், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், மாரண்டஅள்ளி பேரூர் செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், முன்னாள் அவைத்தலைவர் தனகோடி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : polling agents ,DMK ,Balakod Silver Market ,
× RELATED மதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்