×

அதிமுக நிர்வாகியை தாக்கி மிரட்டியதாக மாஜி எம்எல்ஏ உள்பட 8பேர் மீது வழக்கு

அரூர், டிச.4: மொரப்பூர் அருகே அதிமுக நிர்வாகியை தாக்கிய, அமமுகவை சேர்ந்த மாஜி எம்எல்ஏ., முருகன் உள்ளிட்ட 8பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தம்பிச்செட்டிப்படியை சேர்ந்தவர் இளவரசன். இவரது ஜூஸ் பேக்டரியின் சுற்றுச்சுவரில், அமமுகவினர் நேற்று சுவர் விளம்பரம் எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற அதிமுக கிளை செயலாளர் ஆறுமுகம்(62) மற்றும் கட்சியினர், நாங்கள் சுவர் விளம்பரம் எழுத இருந்த சுவரில், நீங்கள் ஏன் விளம்பரம் எழுதுகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கண்ட இளவரசன் இருதரப்பினரையும், சுவர் விளம்பரம் எழுத வேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து, ஆறுமுகம் கட்சியினருடன் திரும்பி சென்று விட்டார்.

இந்நிலையில், ஆறுமுகம் வீட்டிற்கு அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான முருகன், முன்னாள் சேர்மன் தென்னரசு, ஏகநாதன், சிற்றரசு, தீப்பொறி செல்வம், கமல், நரசிம்மன், கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சென்றுள்ளனர். பின்னர், ஆறுமுகத்தை முருகன், கனகராஜ் ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆறுமுகம், அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ முருகன், கனகராஜ் உள்பட 8பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : MLA ,executive ,AIADMK ,
× RELATED தி. கோட்டில் நாளை திமுக செயற்குழு கூட்டம் மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை