×

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 31 பேருக்கு ₹2.34 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கருணை இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகா, 31 பயனாளிகளுக்கு ₹2.34லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்த 57 சாதாரண நபர்களுக்கு ₹31.48 லட்சம் திருமண உதவித்தொகை, 4042 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், 4049 நபர்களுக்கு இலவச பஸ் பாஸ், 926 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹2,81,41,300 மதிப்பில் உதவி உபகரணங்கள், 2357 மாணவ, மாணவிகளுக்கு ₹60.33 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Tags : persons ,Disability Day ,occasion ,
× RELATED வேதாரண்யத்தில் 131 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்