×

இ.கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.4: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 8 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் கோபால், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதேபோல், அரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் அல்லிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,E. Communist Party ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்