×

மீட்பு விமானத்தில் கடத்திய 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ தனியார் மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறங்கிய பின்பு, விமான ஊழியர்கள் விமானத்திற்குள் சென்று சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். அப்போது ஒரு சீட் அடியில் பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் வந்து பார்த்தபோது, அதனுள் ரூ.50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் இருப்பது தெரிந்தது. அதை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைதனர். பின்னர், துபாயிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது வேலூரை சேர்ந்த விவேக் மனோகரன் (30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனையிட்டனர். அப்போது, அவர் அணிந்திருந்த செருப்புகளிலில் ரூ.10 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதை கைப்பற்றி பயணியை கைது செய்தனர்.

Tags :
× RELATED துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது