×

டாஸ்மாக் சூபர்வைசரை மிரட்டி பணம் பறித்த போலி நிருபர் உட்பட 2 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த ஆரோக்கியசாமி (45), டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது  வீட்டிற்கு வந்த 2 பேர், ‘‘நாங்கள் நிருபர்கள். நீங்கள் செய்யும் தவறுகள் நன்றாக தெரியும். அதுபற்றி செய்தி வெளியிட போகிறோம். 20 ஆயிரம் கொடுத்தால் செய்தி வெளியிடாமல் இருப்போம்,’’ என தெரிவித்துள்ளனர்.  அவர்களின் மிரட்டலுக்கு பயந்து ₹20 ஆயிரத்தை ஆரோக்கியசாமி கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால்,  கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (33), காந்திமதி நகர் பகுதியை சேர்ந்த ஷாம் (32) ஆகியோர், பணம் பறித்தது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அருண்குமார் மாத பத்திரிகை ஒன்றில் நிருபர் எனவும், பத்திரிகையாளர்  சங்கம் ஒன்றில் வடசென்னை மாவட்ட துணை செயலாளராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது ஐ.டி கார்டுகளை பெற்று விசாரித்ததில் போலி என தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Tags : reporter ,supervisor ,Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை மிரட்டி...