×

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே தடத்தில் சிக்னல் பழுதுபார்க்கும் பணி நடப்பதால் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கேட் இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை நாட்களுக்கு மூடப்படும் என காஞ்சிபுரம் ரயில் நிலைய அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பொன்னேரி கரை செல்லும் சாலையில் புதிய ரயில்வே நிலையம் உள்ளது. இங்குள்ள சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து கோளாறை பழுதுபார்க்கும் பணி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதனால், நேற்று இரவு 9 மணிமுதல் இன்று காலை 6 மணி வரையும், இன்று இரவு 9 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையும் புதிய ரயில் நிலைய ரயில்வே கேட் மூடப்படும். எனவே, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வழியாக செல்லும் வாகனங்கள், காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலை மற்றும் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : railway station ,Kanchipuram ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக...