×

திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேறும்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேச்சு

செங்கல்பட்டு: விடியலை நோக்கி மு.க.ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி மூலமாக, அரசு ஊழியர்கள் குறைகேட்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமை வகித்தார். எம்பி செல்வம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் நரேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அப்போது, சபாபதி மோகன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும், இதில் அரசின் அனைத்து துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கிய சலுகைகள், அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட  சலுகைகள் மற்றும்  பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசினர். திமுக நிர்வாகிகள் அன்புச்செல்வன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் எம்.கே.டி.கார்த்திக், கே.பி.ராஜன், ராஜி, சந்தோஷ், ரத்தீஷ்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,servants ,Policy Area Secretary ,speech ,
× RELATED திமுகவை ஆட்சியில் அமர்த்துவதே நமது ஒரே இலக்கு : உதயநிதி ஸ்டாலின் உறுதி