×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவடி நாசர் எம்.பூபதி, டி.ஜெ.கோவிந்தராசன் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய  மற்றும் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர்,  திருத்தணி எம்.பூபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லியில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய பா.ஜ.க. அரசையும், அதற்கு துணைப் போகும் எடப்பாடியின் மாநில அரசையும் கண்டித்து நாளை (5 ஆம் தேதி)  காலை 10 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நாசர், பூபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எம்எல்ஏ க்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  எனவே ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

இதேபோல மத்திய, மாநில அரசையும் கண்டித்து நாளை (5 ம் தேதி) காலை 9 மணியளவில் பொன்னேரி அண்ணா சிலை அருகில்கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எனவே ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், விவசாய பெருமக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Tags : protests ,Avadi Nasser M. Bhupathi ,DMK ,Announcement ,Delhi ,DJ Govindarajan ,
× RELATED தலைமை அலுவலகத்தை காலிசெய்ய கூறியதை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்