×

மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

பள்ளிப்பட்டு:  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் கிராமத்தை சேர்ந்த  அண்ணாதுரை (34). பீகார் மாநிலத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ள அவர் நேற்று முன்தினம் மாலை பள்ளிப்பட்டு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை விபத்தில் இறந்தார். அவரது, இறுதிச்சடங்கு சொந்த கிராமத்தில் நடைபெற்றது.  இதில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில், போலீசார்  21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்தனர். இறுதி சடங்கில் போலீசார், பல்வேறு அரசியல் கட்சிகள் பிரமுகர்கள், உட்பட கிராம மக்கள் அதிக அளவில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Tags : soldier ,Central Security Forces ,
× RELATED புதிய மாவட்ட தலைவர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி