×

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

திருவள்ளூர்: கலெக்டர் பா.பொன்னையாவிடம் அரசு ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன்  கொடுத்துள்ள கோரிக்கை மனு விவரம்: திருவள்ளுவர் நகரம், பெரும்பாக்கம் ஏ.வார்டு டோல்கேட் பகுதியில் உள்ள 50 சென்ட் நிலத்தில் 500 குடும்பங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இட நெருக்கடியால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே  இவர்களுக்கு தரிசு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Tags :
× RELATED இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ரேஷன், ஆதார் கார்டை சாலையில் வீசி போராட்டம்