×

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் திமுக மாவட்ட செயலாளர், பொறுப்பாளர் கூட்டறிக்கை

திருச்சி, டிச.4: திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதை ெதாடர்ந்து அந்த கூட்டத்தில் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை (5ம் தேதி) காலை 9 மணிக்கு திருச்சி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கிளை செயலாளர்கள், முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : KN Nehru ,Office ,Trichy Collector ,
× RELATED கே.என்.நேரு பேட்டி 2 பேர் டிஸ்சார்ஜ்