×

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவர் கைது

திருச்சி, டிச. 4: சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள், வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இமிகிரேசன் அதிகாரி பாலன்மணி நடத்திய சோதனையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் இளம்பக்குடி மாமரத்துப்பட்டியை சேர்ந்த இன்னாசிமுத்து(58) என்பவரின் பாஸ்ேபார்ட்டை சோதனையிட்டபோது திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு ஆறுமுகம் மகன் முத்து(57) என்ற போலி பெயர், முகவரியில் பாஸ்போர்ட் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்னாசிமுத்துவை அதிகாரிகள் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Singapore ,
× RELATED காதலித்த பெண் கிடைக்காததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை