×

பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி, டிச.4: திருச்சி பாலக்கரை செபாஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம்(58). இவர் மேலப்புதூரில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று முன்தினம் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், ஆராக்கியத்திடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500 பறித்துக்கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து சென்னை செங்கல்பட்டு பெருங்களத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ஸ்டீபன்(33) என்பவரை கைது செய்தனர். ஸ்டீபன் மீது திருச்சியில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Tags :
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது