×

தனியார் நிறுவனத்தில் புகுந்து கேமரா, லேப்டாப் திருட்டு

திருச்சி, டிச.4: திருச்சி கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா(45). இவர் பாலக்கரை மேலப்புதூரில் உள்ள வணிக வளாகத்தில் நெட்வொர்க் அலுவலகம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு அலுவலகத்தில் கதவை சற்று திறந்து வைத்து தூங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமி, நைசாக உள்ளே புகுந்து அங்கிருந்த வீடியோ கேமரா மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றார். இது குறித்து கிருஷ்ணராஜா பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு எஸ்ஐ வைத்தியநாதன் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்.

Tags : company ,
× RELATED லேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்