×

திருச்சி அண்ணாசிலை அருகே நாளை திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.4: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, தலைமையில் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாத்து, இந்திய வேளாண்மை வீழாமல் தடுக்கவும் நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சத்திரம் அண்ணா சிலை அருகில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,demonstration ,Trichy Annasila ,
× RELATED வீடுகளில் கருப்புக்கொடி