உக்ரைனுக்கு ரூ21,370 கோடி அமெரிக்கா உதவி

வாஷிங்டன்: ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து போராடி வருகின்றது. இந்நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ21370 கோடி ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் சுமார் ரூ4,109கோடி அளவிற்கு அம்மோனியம் அனுப்பி வைக்கப்படும். மேலும் எதிர்காலத்தில் வெடிமருந்துகள், ரேடார், பிற ஆயுதங்களை வாங்குவதற்காக ரூ16,439கோடி நிதியுதவியை வழங்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை அமெரிக்க ராணுவ கையிருப்பில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். ரஷ்யா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ நிதியுதவியை அமெரிக்கா வழங்குகிறது.

The post உக்ரைனுக்கு ரூ21,370 கோடி அமெரிக்கா உதவி appeared first on Dinakaran.

Related Stories: