×

கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வதற்கான நோட்டீஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் அனுப்பினர்

தஞ்சை, டிச. 4: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் வரும் 17ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குனருக்கும், பொது மேலாளருக்கும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு தொழில்தகராறு சட்ட விதிப்படி முறையாக வேலைநிறுத்த நோட்டீஸை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தின் ஏஐடியூசி சார்பில் துணைத்தலைவர் சந்திரன், பொது செயலாளர் கஸ்தூரி ஆகியோர் கும்பகோணம் மண்டலத்துக்கு உட்பட்ட 4,250 பணியாளர்களின் சார்பில் தஞ்சை தலைமை அஞ்சலகம் மூலம் பதிவு தபாலில் நேற்று அனுப்பி வைத்தனர்.

Tags : Transport workers ,
× RELATED அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன்...