×

பெரும்பாலான கடைகள் அடைப்பு ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

தஞ்சை, டிச. 4: தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியி–்ட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவான 637.02 மி.மீட்டரில் இதுவரை 296.41 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 46.53 சதவீதமாகும். தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வெண்ணாறு கோட்ட பிரிவில் 13 ஏரி, குளங்களில் 6 ஏரி, குளங்கள் 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரையிலும், 3 ஏரி, குளங்கள் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரையிலும், 4 ஏரி, குளங்களில் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளன. கல்லணை கால்வாய் கோட்ட பிரிவில் 524 ஏரி, குளங்களில் 225 ஏரி, குளங்கள் 100 சதவீதமும், 165 ஏரி, குளங்கள் 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரையிலும், 53 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளது.

அக்னியாறு கோட்ட பிரிவில் 24 ஏரி, குளங்களில் 2 ஏரி, குளங்கள் 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரையிலும், 22 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளன. ஆற்று பாதுகாப்பு கோட்டத்தில் 81 ஏரி, குளங்களில் 65 ஏரி, குளங்கள் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரையிலும், 16 ஏரி, குளங்கள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பியுள்ளன. மழை காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மழை, இடி, மின்னல் நேரங்களில் வெட்டவெளி பகுதிகள், நீர் நிலைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதால் குழந்தைகள், முதியவர்கள், கால்நடைகள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அறிவுரை பள்ளி கட்டிடத்தில் மக்கள் தங்க வைப்பு
பேராவூரணி பூனைகுத்தி காட்டாற்றில் மழை வெள்ளம் அதிகரித்து கரை உடைப்பு ஏற்படும் நிலை உருவானது. கரை உடைப்பு ஏற்பட்டால் வெள்ளநீர் அண்ணா நகர் பகுதியில் புகும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிஇளங்கோ, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ராஜேந்திரன், வார்டு செயலாளர் நீலகண்டன் ஆகியோர் பொதுப்பணித்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். மேலும் பேராவூரணி அண்ணாநகர் பகுதியில் சுரேஷ் என்பவரின் குடிசை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து பெரியகுளம் ஏரி, செங்கமங்கலம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த பொதுமக்களை மீட்டு பள்ளி கட்டிடத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.

Tags : shops ,lake ,
× RELATED மெரினா கடற்ரையில் வியாபாரம் செய்ய 900 பேருக்கு ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு