×

பேராவூரணி கடைவீதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்ற வேண்டும்

பேராவூரணி, டிச. 4: பேராவூரணி கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டுமென அதிகாரி தெரிவித்துள்ளார். பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையில் மைய தடுப்பான் கட்டி சாலையின் இரு ஓரங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்காலும், அதன் மேல் நடைபாதை மேடை அமைத்து நான்குவழி சாலையாக மேம்பாடு செய்யப்படவுள்ளது. இந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வேலைகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை, சேது சாலை மற்றும் பட்டுக்கோட்டை சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 15ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றி நெடுஞ்சாலைத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Shopkeepers ,Peravurani Mall ,
× RELATED கடை வியாபாரிகள் சங்கம் துவக்கம்