×

தரைப்பாலத்தை தாண்டி ஓடும் வெள்ளம் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

ஜெயங்கொண்டம், டிச. 4: ஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் தழுதாழைமேடு கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் 2006ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி உட்கோட்டை பிரிவு சாலையில் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து, பைக் மீது மோதியது. இதில் கொளஞ்சிநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிந்து ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் உயிரிழந்த கொளஞ்சிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.9,92,601 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து நேற்று மதியம் தஞ்சையில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை நீதிமன்ற பணியாளர் ஜப்தி செய்தார்.

Tags : victim ,flood accident ,ground bridge ,
× RELATED வாய்க்காலில் இறங்கிய அரசு பேருந்து