×

மேலமாத்தூரில் இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

பாடாலூர், டிச 4: ஆலத்தூர் தாலுகா மேலமாத்தூரில் இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்ய ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்-சரண்யா தம்பதியினரின் மகன் சரவணன் (7). இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சின்னசேலம் பகுதிக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன் உடல்நல குறைவால் இறந்து விட்டார். அதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரான மேலமாத்தூர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மயானம் அருகே நிலம் உள்ள சிலர் சிறுவனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் இன்ஸ்பெக்டர் கதிரவன், வருவாய் ஆய்வாளர், விஏஓ ஆகியோர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Melamathur ,
× RELATED அடையாளம் தெரியாத மூதாட்டி உடல்