×

போக்குவரத்து பாதிப்பு பாடாலூர் அருகே அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

பாடாலூர், டிச.4: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவர் பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் குன்னம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு கனகமணி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

Tags : Government employee ,suicide ,Badalur ,
× RELATED பாடாலூர் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை