×

மண்புழு உரங்களை பயன்படுத்தினால் நிலத்தின் வளங்களை அதிகப்படுத்தலாம்

ஜெயங்கொண்டம், டிச. 4: ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் வட்டாரம் வாரியங்காவலில் தமிழ்நாடு நிலைக்கதக்க மானாவரி வளர்ச்சி இயக்க விவசாயிகள் பயிற்சி நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமை வகித்து கோடை உழவு, சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதன் மூலம் நீர் பிடிப்பு தன்மை அதிகரித்தல், தொழு உரம் மற்றும் மண்புழு உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் அங்கக கனிமங்களை அதிகப்படுத்துதல், குறைந்த அளவில் தழைச்சத்து உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துதல் குறித்து பேசினார்.

ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஐலட்சுமி பங்கேற்று பயிர் காப்பீடு மற்றும் வோண்மைத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். மானாவரி சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்களான மண்வளத்தை மேம்படுத்தும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து தொழு உரத்தை பயன்படுத்துதல், பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி உபயோகித்தல்,நோய் மற்றும் வறட்சியை தாங்கி வளரும் ரகங்களை உபயோகித்தல், விதை நேர்த்தி செய்தல், வறட்சி காலங்களில் பாக்டீரியா கரைசல் ஏக்கருக்கு 200 மிலி தெளித்தல், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுதல், பயறு வகைகளில் பூ மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் பூஸ்டர்களை தெளிப்பதன் மூலம் பூ பூக்கும் திறனை அதிகரித்தல் குறித்து சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஐகலா விளக்கம் அளித்தார்.
முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி வரவேற்றார். உதவி வேளாண் அலுவலர் சிவரஞ்சினி நன்றி கூறினார்.

Tags : land ,
× RELATED கடந்த 6ம் தேதி திறக்கப்பட்ட...