×

ஆண்டிமடம் பகுதியில் நோய் தடுப்பு முகாம் ஆய்வு

ஜெயங்கொண்டம், டிச. 4: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் கரூர் மாவட்ட தொற்று நீக்க குழுவினர் இணைந்து நோய் தடுப்பு முகாமில் ஈடுபட்டனர். குவாகம், குளத்தூர், காட்டாத்தூர், கவரப்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா என ஆதிதிராவிடர் நல துணை ஆட்சியர் சரளா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதைதொடர்ந்து குவாகம் கிராமத்தில் நடந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கபசுர குடிநீர் வழங்கினார். ஆய்வின்போது ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.

Tags : Andimadam ,area ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது