×

ஆஸ்திரேலியாவில் டிக்டாக்கிற்கு தடை

கான்பெரா: பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தகவல் திருட்டு அச்சத்தின் எதிரொலியாக கடந்த 2020ம் ஆண்டு டிக்டாக், விசாட் உட்பட பத்துக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசும் டிக்டாக் செயலிக்கு தற்போது தடை விதித்துள்ளது. இது குறித்து அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரேபஸ் கூறுகையில்,‘‘உளவு துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பரிந்துரையின் அடிப்படையில் டிக்டாக் செயலிக்கான தடை அமல்படுத்தப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

The post ஆஸ்திரேலியாவில் டிக்டாக்கிற்கு தடை appeared first on Dinakaran.

Tags : TikTok ,Australia ,Canberra ,2020 ,Tik Tok ,Visat ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்...