×

விருதுநகர் அருகே மழையால் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

விருதுநகர், டிச. 4: விருதுநகர் அருகே மழையினால் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. விருதுநகர் அருகே கன்னிசேரி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பதி நகரில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை பல மாதங்களாக சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலம் என்பதால் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமில்லாமல் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் இச்சாலையை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் பெண்கள் தக்காளி நாற்று நட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் வடிவேல்முருகன், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Seedling planting protest ,Virudhunagar ,road ,
× RELATED விருதுநகர் அருகே சேதமடைந்து...