×

புரெவி புயல் எச்சரிக்கை சாஸ்தா கோயில் அணைக்கட்டு பகுதியில் அரசு செயலர் ஆய்வு

ராஜபாளையம், டிச. 4: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சாஸ்தா கோயில் அணைக்கட்டு மற்றும் அய்யனார் கோயில் பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து ராஜபாளையம் நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் கண்மாய் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் புரெவி புயலைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பாளருமான மதுமதி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் ஆகியோர் நேற்று சாஸ்தா கோயில் அணைக்கட்டு பகுதி, அய்யனார் கோயில் பகுதிகளில் ஆய்வு செய்தனர். புரெவி புயல் முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் காசி செல்வி, வட்டாசியர் தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Secretary of State ,area ,Shasta Temple Dam ,
× RELATED வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா...