×

நரிக்குடி அருகே மழைக்கு வீடு இடிந்தது

திருச்சுழி,டிச. 4: நரிக்குடி அருகே உள்ள டி.வேளங்குடியைச் சேர்ந்த சுப்பையா(60). இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த இருதினங்களாக புரெவி புயல் காரணமாக பரவலாக மழை பெய்து வரும்நிலையில் சுப்பையாவின்
வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுப்பையாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த டி.வேளங்குடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு சென்றுள்ளனர். வீடு இடிந்த சுப்பையா குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : house ,Narikkudi ,
× RELATED மதுரையில் தொடர் மழையால் இரட்டை மாடி வீடு பூமிக்குள் புதைந்தது