×

வத்திராயிருப்பு அருகே கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு

வத்திராயிருப்பு டிச. 4: வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் பஸ்டாப் அருகே முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள 7 சமூக மக்கள் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலை இந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக தகவல் பரவியது. இதை அடுத்து 7 சமூதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கோயிலை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். தகவலறிந்த திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி நமச்சிவாயம், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோயிலை கையகப்படுத்த மாட்டோம் என உத்திரவாதம் அளித்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறினர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் கையில் வேப்பிலையுடன் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் வேப்பிலையுடன் சாமி ஆடினார். பின்னர் வத்திராயிருப்பு தாசில்தார் ராமதாஸ் மறியலில் ஈடுபட்டவா–்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்பு இந்து சமய அறநிலையத்துறை கோயிலை கையகப்படுத்தமாட்டது என்ற உறுதியை அளித்த பின் மறியல் கைவிடப்பட்டது. முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தம்பிபட்டியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tags : acquisition ,Vatri ,temple treasury ,
× RELATED தரமற்ற பணியால் பொதுமக்கள் எதிர்ப்பு