×

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், டிச. 4: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் ராஜபாளையத்தில் சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் தூய்மை பணியாளர் சங்கம் சார்பில்(சிஐடியு) சார்பில் ஆவரம்பட்டியில் முத்தையா தலைமையிலும், சுமைப்பணி தொழிலாளர் சங்கம் தொழிலாளர் சங்கம் சார்பில் பஞ்சு மார்க்கெட்டில் ரெங்கசாமி, விஜேயந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டாக்ஸி வேன் தொழிலாளர் சங்கம் சங்கம் சார்பில் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணேசன், மாரியப்பன், சிஐடியு நகர் கன்வீனர் சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags : demonstration ,CITU ,Rajapalayam ,Delhi ,
× RELATED டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்