×

விருதுநகர் அம்மன் கோயில் திடலில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி, டிச. 4: திமுக விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, தங்கம் தென்னரசு எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டிச.5ம் தேதி விருதுநகர் அம்மன் கோயில் திடலில் காலை 9 மணியளவில் கருப்புக்ெகாடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மாவட்டக் கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் அறிக்ைகயில் என்று கூறியுள்ளனர்.

Tags : protest ,DMK ,temple complex ,Virudhunagar Amman ,
× RELATED டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தடையை...